கொலை மிரட்டல். மௌனம் காக்கும் அமைச்சர். 

சுதந்திரத்திற்கு முந்தைய காலங்களில், நாட்டின் விடுதலைக்காக தமது ரத்தத்தை மையாக்கி எழுதிப்பெற்ற இன்றைய சுதந்திர நாட்டில், 

தற்போதைய நிருபர்களின் நிலை பல தலைவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிருபர்களை கேவலப்படுத்தி, அவர்களின் ரத்தத்தை உறிஞ்சி பிழைப்பு நடத்தும், தலைவர்களின் PROக்கள் பற்றிய பதிவு இது.

முன்பு. அதாவது 2G என்ற அலைவரிசை வருவதற்க முன்பு, அச்சு ஊடகங்களும் ஒளி ஊடகங்களும் மட்டுமே இருந்தது. இன்றைய செய்திகளை நாளை தான் தெரிந்துகொள்ள முடியும்.

3G, 4G அலைவரிசை வந்த பிறகு ஒளி ஊடகங்கள் அதிகமானது, அச்சு ஊடகங்கள் குறைந்தது.

தற்போது அச்சு ஊடகங்கள் பல இணையதளங்களில் நுழைந்து, அடுத்த நொடி செய்திகள் வரை வழங்கி வருகிறது. ஒளி ஊடகங்கள் LIVE வாக செய்திகளை வழங்குகிறது.

இப்படி ஆன்லைன் மயமானது பத்திரிகை உலகம். இதில் ஆன்லைன் மீடியாவும் அடங்கும். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நமது உள்ளூர் செய்திகளை, உலகிற்கு காண்பிப்பது ஆன்லைன் மீடியா தான். இதில் நிருபர்களின் பங்கு மிக முக்கியமானது.

இதை மறைந்த தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள், பலமுறை பாராட்டியுள்ளார்கள். முன்பெல்லாம் அரசு நிகழ்ச்சிகளை, நிருபர்களுக்கு தெரிவிக்க ஒரு PRO தான் இருந்தார்.

தற்பொழுது ஒவ்வொரு தலைவரும், தனது நல்ல செய்திகள் மக்களிடம் உடனடியாக சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் நிகழ்ச்சியை நிருபர்களிடம் தெரிவிக்கவும், நிருபர்கள் வந்துசெல்ல பணம் வழங்கி, தனக்கென ஒரு PRO வை நியமித்துள்ளார்கள்.

இந்த PRO க்கள் சிலர், நிருபர்களுக்கு வழங்கிய பணத்தில் பாதியை அமுக்கிக்கொண்டு, ஏகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். இதை எதிர்த்து கேள்வி கேட்கும் நிருபர்களை நாயை விட கேவலமாக நடத்துகின்றனர்.

இதை, துணிந்து செய்தி வெளியிட்ட அரசுமலர் ஆன்லைன் மீடியா பாலமுருகன் அவர்களை, என்னிடம் கையேந்தும் “பிச்சைக்காரா நாயே” என வரைமுறை இல்லாமல் கூறி, கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார், மதிப்பிற்குரிய அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் PRO திவாகர்.

ஊடக தோழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள், இவர்கள் நம்மை என்ன செய்துவிட முடியும் என்று நினைத்த PRO திவாகருக்கு, கண்டணத்தால் மரணஅடி அடித்தனர், ஊடக சங்கத்தலைவர்கள்.

இது போன்ற சில PRO க்களுக்கு எச்சரிக்கை மணியும் தான்.

இதை கண்டு ஆடிப்போன திவாகர், தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். இதில் பாலமுருகன் 10000 ரூபாய் வாங்கி சென்றதாக, தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் மீடியாவின் நிருபருக்கு பத்தாயிரம் ரூபாய் என்றால், அச்சு ஊடகங்களுக்கும் ஒளி ஊடகங்களுக்கும் எவ்வளவு தொகை வழங்கினர் என குறிப்பிடப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நூறுக்கு, இருநூறுக்கும் பிச்சை எடுக்கும் நிருபர்களே என கூறிய திவாகர், பத்தாயிரம் வாங்கினார் என தன்னிலை விளக்கம் அளித்தது ஏன்?

அப்படியே அமைச்சர் அள்ளி வழங்கியிருந்தால், இதுவரை 500, 300 ரூபாய் என வழங்கியது ஏன்?

இதுவரை அமைச்சர், ஆன்லைன் மீடியா நிருபர்களுக்கு வழங்கிய பத்தாயிரம் ரூபாய் பணத்தை, திவாகர் சுருட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது.

இது சம்பந்தமாக அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் மௌனம் காப்பது, பத்திரிகையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

இதுகுறித்து எங்களிடம் திவாகர் பேச நினைத்தால் 9751086668 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம்.
மேலும், ஆன்லைன் மீடியா நிருபருக்கு பிரச்சனை என்றதும் வெகுண்டெழுந்த 

TUJ தலைவர் திரு. சுபாஷ் அவர்கள். 

WJUT மாநில தலைமை நிலைய செயலாளர் திரு. ரஃபிக் அவர்கள்.


SAJA தலைவர் திரு. க.குமார் அவர்கள்.


WJUT தலைவர் திரு.சகாயராஜ் அவர்கள். 


AITJA தலைவர் டாக்டர்.த.இரா.கவியரசு அவர்கள்


TNJPWA பொதுச்செயலாளர் திரு. மிதர் மைதீன் அவர்கள். 


மக்கள் செய்தி மய்யம், தலைவர் திரு அன்பழகன் அவர்கள். 

அனைவருக்கும் ஆன்லைன் மீடியா சார்பிலும், தமிழ்நாடு டுடே செய்தி குழுவினர் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்..

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *