திருப்பூரில், கின்னஸ் சாதனையாளர் தற்கொலை. 

திருப்பூரில் கின்னஸ் சாதனை படைத்த யோகா மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
திருப்பூர் மாவட்டம் நல்லூரை சேர்ந்தவர் ஹேமச்சந்திரன்(28). யோகா பாஸ்டரான இவர் 20 கிலோ எடையை நகத்தால் தூக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் ஹேமச்சந்திரன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஹேமச்சந்திரன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. கடன் கொடுத்தவர்கள் இவரை டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்த ஹேமச்சந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஹேமச்சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் ஹேமச்சந்திரனின் குடும்பத்தாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *