
சோபியா வழக்கை சட்டப்படி சந்திக்க தயார் என்றும் இதற்கெல்லாம் பயப்படுபவள் நானல்ல என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் முன்பே ‘பாஸிச பாஜக ஒழிக’ என்று கோஷம் போட்ட ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.