விஜய்சேதுபதிக்கு சிலை.. 

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 25வது படமான ‘சீதக்காதி’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டுவிட்டரில் தினமும் இந்த படம் குறித்த தகவல் மற்றும் நிகழ்ச்சிகள் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தில் நீதிபதியாக நடித்திருக்கும் பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன், விஜய்சேதுபதி நடித்த ‘அய்யா ஆதிமூலம்’ கேரக்டரின் சிலையை சற்றுமுன் திறந்து வைத்தார். இதுகுறித்த வீடியோ டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்சேதுபதி, அர்ச்சனா, மகேந்திரன், மெளலி, பகவதி பெருமாள், ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். 96 புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ‘பாஷன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *