என்னா கைய புடிச்சு இழுக்கற.. சிறை முன்பு கைகலப்பு செய்த வக்கீல் மற்றும் போலீசார்.. வீடியோவை பாருங்க..

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலைதயில் ஜெயக்குமாருக்கு தாராபுரம் நீதிமன்றம் பிணைவழங்கியதன் அடிப்படையில் இன்று ஜெயக்குமார் சிறையில் இருந்து வெளியேறும் சூழல் இருந்த நிலையில் விருதுநகர் காவல்துறையினர் வேறொரு வழக்கில் ஜெயக்குமாருக்கு தொடர்பிருப்பதாக கூறி கைது செய்ய கோவை மத்திய சிறை வாயிலில்காத்திருந்தனர். பிணையில் வருபவரை எவ்வித அறிவிப்புமின்றி கைது செய்வது சட்டத்திற்கு புறம்பானது எனக்கூறு ஜெயக்குமார் தரப்பினரும் வழக்கறிஞர்களும் காவக்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .

இரு தரப்பினருக்குமிடையே மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது அதன் பின்னர் உள்ளூர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததன் அடிப்படையில் அனைவரும் சமாதானமாகினர். மத்தியசிறை வாசலில் பிணையில்வரும் நபரை காவல்துறையினர் கைது செய்ய மேற்கொண்ட நடவடிக்கையால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *