உலகம் வியக்கும், ஐஸ்வர்யா அறக்கட்டளை.. அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா? 

பிறவியிலேயே இருதய நோயால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரம் குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து வரும் ஐஸ்வர்யா அறக்கட்டளை
55 பேருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி அளித்துள்ளது, ஐஸ்வர்யா அறக்கட்டளை

இருதய மாற்று அறுவை சிகிச்சை என்பது உயிர் காக்கும் செயலாகும். தமிழக அரசின் சிறப்பான முயற்சி காரணமாக உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இருப்பினும், இது சம்பந்தமான செலவுகள் காரணமாக அறுவை சிகிச்சை எப்போதும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது. பிறவியிலேயே இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களை காக்கும் நடவடிக்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஐஸ்வர்யா அறக்கட்டளை அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. இருதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு தேவையான நிதி உதவியை அளித்து வருகிறது. சென்னை, போர்டிஸ் மலர் மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 55 குழந்தைகளுக்கு இந்த அறக்கட்டளை நிதி உதவி அளித்துள்ளது. இந்த உதவியை உள்நாட்டு போர் நடந்து வரும் நாடுகளை சேர்ந்த குழந்தைகளும் பெற்று பயனடைந்துள்ளனர். இப்படி உலகம் வியக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது ஐஸ்வர்யா அறக்கட்டளை. 

இந்த அறக்கட்டளை இருதய மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு மட்டும் உதவி செய்யாமல், அறுவை சிகிச்சைக்கு பின் நோய்த்தடுப்பு மருந்துகள் மற்றும் கார்டியாக் பயாப்சி போன்ற நடைமுறைகளுக்கும் உதவி செய்கிறது. குழந்தைகளுக்கான இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு வேறு எந்தவொரு அறக்கட்டளையும் வழங்காத மிகப்பெரிய தொகையை இந்த அறக்கட்டளை வழங்கியுள்ளது.இதில் சில பெரியவர்களும் உதவியை பெற்றுள்ளனர். இருதய மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவில் ஒரு சிறந்த மருத்துவமனையாக போர்டிஸ் மலர் மருத்துவமனை உள்ளது.
 
இதுவரை 85 குழந்தைகள் உள்ளிட்ட 300 பேருக்கு வெற்றிகரமாக இருதய மாற்று அறுவை சிகிச்சையை இம்மருத்துவமனை செய்துள்ளது. இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 85 சதவீதம் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். ஐஸ்வர்யா அறக்கட்டளையிலிருந்து தங்களது குழந்தைகளின் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கான உதவியை பெற்றுக் கொண்ட பெற்றோர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
 
இது குறித்து ஐஸ்வர்யா அறக்கட்டளையின் அறங்காவலர் திருமதி. சித்ரா விஸ்வநாதன் கூறுகையில், இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இருதய நோய் பாதிப்புடன் பிறக்கிறார்கள். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குழந்தைகள் இறப்பு விகித்தை குறைக்க நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஐஸ்வர்யா அறக்கட்டளை இருதய மாற்று அறுவை சிகிச்சை திட்டத்திற்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஆதரவு அளித்து வருகிறது. போர்டிஸ் மலர் மருத்துவமனையின் மாற்று அறுவை சிகிச்சை திட்ட குழு டாக்டர்கள் கே.ஆர். பாலகிருஷ்ணன், சுரேஷ் ராவ் ஆகியோருடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு அதிக செலவாகிறது. இந்த பணத்தை திரட்டுவது என்பது எங்களுக்கு பெரிய சவாலாக உள்ளது.
 
மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களான எச்டிஎப்சி லிமிடெட் அவர்களது எச்டி பரேக் பவுண்டேஷன் மூலமும் மற்றும் டச் வங்கி மற்றும் இன்னும் பிற தாராள மனம் கொண்ட தனி நபர்கள் இந்த திட்டத்திற்கு நிதி உதவி செய்து வருகிறார்கள். இன்னும் பல நிறுவனங்களும் தனி நபர்களும் இந்த திட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நாம் செய்கையில் இனிவரும் காலங்களில் மேலும் பல குழந்தைகளுக்கு நாம் உதவ முடியும் என்று தெரிவித்தார்.
 
ஐஸ்வர்யா அறக்கட்டளை அறங்காவலரும், போர்டிஸ் மலர் மருத்துவமனையின் இருதய அறிவியல்துறை இயக்குனரும், தலைமை இருதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் கூறுகையில், சமீபத்திய காலங்களில் அதிகரித்து வரும் சிக்கல்கள் காரணமாக அதிக அளவிலான குழந்தைகள் இருதய சிகிச்சைக்காகவும் மறுவாழ்வுக்காக ஏங்குகின்றனர். ஐஸ்வர்யா அறக்கட்டளை மூலம் இந்த குழந்தைகளுக்கு மனிதநேய அடிப்படையில் திருமதி. சித்ரா உன்னத சேவையாற்றி வருகிறார். பிறவியிலேயே இருதய நோய் பாதிப்பு குறித்தும் அதற்கு ஆதரவு அளிப்பது குறித்தும் மக்களிடையே நாம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும். மருத்துவ துறையில் ஒவ்வொரு நாளும் புதிய தொழில்நுட்பம் வந்து கொண்டே இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் சாதாரண மனிதருக்கு தேவைப்படும்பட்சத்தில் அதை அவர்களுக்கு கொண்டு செல்வது என்பது மிகவும் முக்கியமானதாகும். ஐஸ்வர்யா அறக்கட்டளை 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறது. மேலும் இருதய நோய் தொடர்பான விழிப்புணர்வை இந்த அறக்கட்டளை தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்லும். இந்த சேவையில் போர்டிஸ் மலர் மருத்துவமனை பங்கெடுப்பது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஐஸ்வர்யா அறக்கட்டளையின் இந்த சிறந்த சேவையை நான் பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்.
 
ஐஸ்வர்யா அறக்கட்டளை, இருதய தசை நோயால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பரிசோதனை, நோய் கண்டறியும் சோதனை, சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை போன்ற விரிவான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நோய் கண்டறியும் சோதனை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு நிதி உதவி அளிப்பது மட்டுமல்லாமல் ரத்த பரிசோதனை, திசு பரிசோதனை, ஆஞ்சியோகிராம், ஸ்கேன் மற்றும் மருத்துவ நிர்வாகம் ஆகியவற்றில் உதவி செய்து வருகிறது. மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருக்கும் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைக்கு முந்தைய ஒர்க்-அப்களை செய்வதற்கு ஐஸ்வர்யா அறக்கட்டளை ஆதரவு அளிக்கிறது. எனவே குழந்தைகள் இந்த முழு நடைமுறைக்கும் தயாராக இருக்க வேண்டும். சில நோயாளிகளுக்கு, மாற்று அறுவை சிகிச்சைகக்கு பின் ஓராண்டு வரை தேவையான தடுப்பூசிகளையும் மருந்துகளையும் இந்த அறக்கட்டளை வழங்கி வருகிறது.
 
ஐஸ்வர்யா அறக்கட்டளை மிகப்பெரிய தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். இது, பிறவியிலேயே இருதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு தேவையான நிதி உதவியை அளித்து வருகிறது. இதன் கண்ணோட்டம் நேர்மையானதாகும். பரிசோதனை மற்றும் ஆரம்ப நிலையில் நோய் கண்டறிதல் மூலம் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை இந்த அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு இருதய நோய் பரிசோதனை செய்ததோடு பிறவியிலேயே இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த அறக்கட்டளை, தமிழ்நாடு, கர்னாடகா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்காளம், பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கும் ஆப்பிரிக்கா, கஜகஸ்தான், ஈராக், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை சேர்ந்த குழந்தைகளுக்கும் உதவியுள்ளது.
 
ஐஸ்வர்யா டிரஸ்ட் குறித்து : திறப்புநிலை இதயநோய் மற்றும் அதற்கு சிசிக்சை என்ற குறிக்கோள் மீது பிரத்யேக கவனம் கொண்டு செயல்படும் ஐஸ்வர்யா டிரஸ்ட், அரசுசாரா பெருந்தொண்டு நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்த டிரஸ்ட், இதற்காக நடத்தியிருக்கும் அறுவைசிகிச்சைகளின் வெற்றி விகிதம் மிக உயர்வாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்கிரினீங் மற்றும் ஆரம்பநிலையிலேயே நோய் கண்டறியும் செயல்நடவடிக்கைகள் வழியாக பச்சிளம்குழந்தைகள் உயிரிழப்பு ஏற்படும் விகிதத்தை குறைப்பதே இந்த டிரஸ்ட்-ன் செயல்நோக்கமாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், அறுவைசிகிச்சைகள் வழியாக இதய நோய்கள் பாதிப்புள்ள 1300-க்கும் அதிகமான குழந்தைகளுக்கு உதவியதன் வழியாக தனது குறிக்கோளை இது வெற்றிகரமாக செயல்படுத்தி வந்திருக்கிறது. அத்துடன் பொருளாதார ரீதியாக வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1 இலட்சம் குழந்தைகளுக்கு இதயநோய்களை கண்டறிவதற்கான ஸ்கிரீனிங் செயல்நடவடிக்கையையும் இது மேற்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் மட்டுமின்றி 5 ஆப்பிரிக்க நாடுகள் (ருவாண்டா, பருண்டி, சூடான், நைஜீரியா மற்றும் சோமாலியா) மற்றும் ஈராக்கைச் சேர்ந்த குழந்தைகளும் சிகிச்சையின் மூலம் உடல்நலம் பெற இது உதவியிருக்கிறது.

News Reporter

1 thought on “உலகம் வியக்கும், ஐஸ்வர்யா அறக்கட்டளை.. அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *