1500 தலைப்புகளில் விழிப்புணர்வு கண்காட்சி…

கோவையில் அடுத்த குரும்பபாளை யத்தில் தி யுனைடெட் ஆதரவற்றோர் இல்லத்தின் 25 – வது ஆண்டு விழாவையொட்டி பள்ளி மாணவ – மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. தமிழகத்தில் முதன்முறையாக நடைபெற்ற இக்கண்காட்சியை காவல்துறை கூடுதல் டி . ஜி . பி . பிரதீப் பிலிப் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பேசினார் .

முன்னதாக தி யுனைடெட் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆடை,போர்வைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . கண்காட்சியில் 1500 தலைப்புகள் கொண்ட விழிப்புணர்வு பேனர்கள் , 32 தலைப்புகளில் விளக்கப்படங்கள் வைக்கப் பட்டு இருந்தன . இந்த கண் காட்சியை பள்ளி , கல்லூரி மாணவ – மாணவிகள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் தி யுனைடெட் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராதா கிருஷ்ணன், ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *