பாஜகவை பின்பற்றும் காங்கிரஸ்.. எப்படி தெரியுமா? 

தமிழகத்தில் மாநில அரசாங்கம் ஓன்று இருக்கிறதா? அது இயங்குகிறதா ? என்ற கேள்வி எல்லோரிடமும் வந்து விட்டது, மாநில அரசில் வெகு விரைவில் மாற்றம் ஏற்படும் என்றும், ராஜஸ்தானில் பா.ஜா. க. தோல்வி அடைந்தால் அரசியலை விட்டே விலகுவேன் என்று கூறிய பிரதமர் மோடி, விலகினாரா ? என கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் அரூண் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பாஜாக ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்டு உள்ள பாதிப்புகள் குறித்த பொது மக்களிடம் எடுத்து கூறும் வகையில் விழிப்புணர்வு புரட்சி யாத்திரை பயணம் வரும் 17 ஆம் தேதி நாகர்கோவிலில் தொடங்க இருப்பதற்கான நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் இளைஞர் காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் திருமதி அனிதா தலைமையில் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் இந்த புரட்சி யாத்திரை சம்பந்தமான ஸ்டிக்கர் படத்தை வெளியிட்ட மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் அரூண் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய மாநில அரசுகள் எதுவுமே மக்களுக்கு செய்யவில்லை இந்நிலையில் இன்னமும் 5 ஆண்டுகள் ஆட்சி தேவை என பாஜாக கருதுகுகிறது. 

கடந்த 5 ஆண்டுகளில் எதுவுமே செய்யாமல் இருந்தது மட்டுமல்ல ரிசர்வு வங்கியில் உள்ள மூன்றரை லட்சம் கோடி பணத்தை எடுக்க முயற்சிக்கும் நிலையில் நாடு உள்ளதாகவும், இதனை எடுத்தால் நாடு பொருளாதார ரீதியாக மிக பெரிய வீழ்ச்சியை அடையும் நிலை ஏற்படும், நாட்டின் வளர்சிக்கு பாஜாக பாதகமாக இருந்தது என்பது உண்மையாகி உள்ளதாக கூறிய ஹசன் அரூண், பாராளுமன்ற தேர்தலில் என்னவேணுமானாலும் பேசி ஆட்சியை பிடித்து விடலாம் என பாஜாக – வினர் நினைகிறாக்கள் அது மக்கள் மத்தியில் எடுபடாது என்பதை வட மாநில தேர்தல் உறுதி அளித்து உள்ளது. ராஜஸ்தானில் பா.ஜா. க. தோல்வி அடைந்தால் அரசியலை விட்டே விலகுவேன் என்று கூறிய பிரதமர் மோடி, விலகினாரா ? என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் மாநில அரசாங்கம் ஓன்று இருக்கிறதா? அது இயங்குகிறதா ? என்ற கேள்வி எல்லோரிடமும் வந்து விட்டது, மாநில அரசில் வெகு விரைவில் மாற்றம் ஏற்படும் என்றும் குறிபிட்டார்.

முன்பு ரத யாத்திரை செய்த பாஜகவை நினைவு படுத்தும் வகையில் காங்கிரஸ் புரட்சி யாத்திரை செய்வது குறிப்பிடத்தக்கது.. 

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *