100 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை.. சாதனை படைத்த பார்வதி மருத்துவமனை.. 

சென்னையில் உள்ள பார்வதி மருத்துவமனை மிகவும் சிக்கல் மிகுந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு அதில் சிகிச்சை பெற்றவர் தனது 100-வது பிறந்த நாளைக் கொண்டாட உதவியுள்ளது. முழுவதும் இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு எவரது உதவி இன்றி 4 ஆண்டுகளாக நடமாடி வருகிறார். அவர் தனது 100-வது பிறந்த நாளை தனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுடன் மருத்துவமனை வளாகத்தில் கொண்டாடினார்.


2014-ம் ஆண்டு திரு ஸ்ரீகாந்தன் என்றும் அனைவராலும் “ஸ்ரீகாந்த் தாத்தா’’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் இடுப்பு எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 96. அவரை சோதித்துப் பார்த்ததில் அவருக்கு இடுப்பு எலும்பை அறுவை சிகிச்சை மூலம் முழுவதுமாக மாற்றிட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் வயது முதுமை காரணமாக அறுவை சிகிச்சைக்கு அவரது உடல் தாங்குமா என்ற அச்சமும் ஏற்பட்டது. மேலும் அறுவை சிகிச்சையின்போது முதுமை காரணமாக பல இடையூறுகள் ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் கருதினர். இதனால் மிகுந்த முன்னெச்சரிக்கை மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டு அறுவை சிகிச்சை செய்தனர். அவருக்கு மிகச் சிறந்த வலி நிவாரணி மருந்துகள் மற்றும் கால்சியம் மீட்சி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதன் மூலம் இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரை தயார்ப்படுத்தி சிகிச்சை செய்தனர். தற்போது ஸ்ரீகாந்த் தாத்தா மிகவும் ஆரோக்கியமாக உள்ளார். அவர் தனது அன்றாட பணிகளை எவரின் உதவியின்றியும் நிறைவேற்றிக் கொள்கிறார். இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு நான்கு ஆண்டுகளாக சிறப்பாக வாழும் அவர்தான் இதுபோன்ற சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார்.


இதுகுறித்து பார்வதி மருத்துவனையின் முட நீக்கியல் பிரிவின் தலைமை மருத்துவரும் மருத்துவமனை தலைவருமான டாக்டர் எஸ். முத்துகுமார் கூறியது: முதியவர்கள் தங்களது வயது காரணமாக இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள தயங்க தேவையில்லை. அதிலும் குறிப்பாக 90 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. புதிய தொழில்நுட்பத்தின் மூலமும் மருத்துவ சிகிச்சை மூலமும் முதுமை ஒரு பொருட்டல்ல என்பது நிரூபணமாகிறது. இப்போது இடுப்பு எலும்பு மாற்று சிகிச்சையானது முதியோர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஆனால் அவை அனைத்துமே சிகிச்சைக்குப் பிறகு எந்த அளவுக்கு நோயாளிகள் நடமாடுகிறார்கள் என்ற வெற்றி அளவீட்டைப் பொருத்தது. மேலும் மருத்துவமனையில் எத்தனை காலம் தங்கியிருக்க வேண்டியுள்ளது, சிகிச்சைக்குப் பிந்தைய நாள்கள், எவ்வளவு நாள் நடமாட்டம் இல்லாமல் இருக்க வேண்டியிருக்கும் என்பதைப் பொறுத்தது. நமது இப்போதைய வாழ்க்கைத் தரம் இத்தகைய அறுவை சிகிச்சையில் உள்ள சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளை ஓரளவு போக்குவதாக உள்ளது,’’ என்று குறிப்பிட்டார்.
 https://youtu.be/i1zY8p6fRNY 
பார்வதி மருத்துவமனையின் இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மிதுன் கூறியது:
இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதில் குழப்பம் தேவையற்றது. மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வசதி, தெரபி முறைகள் மற்றும் சிகிச்சைக்கான வசதிகள் ஆகிய அணைத்துமே முட நீக்கியல் அறுவை சிகிச்சைகளை எளிமைப்படுத்தியுள்ளதோடு நோயாளிகள் விரைவில் குணமடையும் வாய்ப்பையும் பிரகாசமாக்கியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக முதியவர்களுக்கு உரிய சிகிச்சைகளை அளிப்பதில் இம்மருத்துவமனை மிகச் சிறந்த முன்னோடியாகவும், முட நீக்கியல் சார்ந்த பலவித நோய்களுக்கு தீர்வு அளிப்பதிலும் சிறந்து விளங்குகிறது. சிகிச்சைக்குப் பிறகு மகிழ்ச்சியான, சுதந்திரமாக வாழும் நம்பிக்கையை மருத்துவமனை அறிக்கிறது. முட நீக்கியல் மருத்துவமானது விரைவாக குணமடைய வழி வகுக்கிறது. போதிய உடற்பயிற்சி, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதலைக் கைவிடுதல் மற்றும் தொடர் மருத்துவ பரிசோதனைகள் ஆகிய அனைத்துமே விரைவான குணம் பெற உதவும்,’’ என்றார்.

பார்வதி மருத்துவமனை பற்றி:
சென்னையில் உள்ள முன்னணி பன்னோக்கு மருத்துவமனைகளில் பார்வதி மருத்துவமனையும் ஒன்றாகும். நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சை அளிப்பதில் கடந்த 30 ஆண்டுகளாக மிகவும் புகழ் பெற்ற மருத்துவமனையாகத் திகழ்கிறது. முட நீக்கியல் மருத்துவம், அவசர மற்றும் விபத்து கால சிகிச்சை, மாரடைப்பு, நரம்பியல், சிறுநீரம் சார்ந்த பிரச்சினை, செரிமாண பிரச்சினை உள்ளிட்டவற்றுக்கு மிகச் சிறந்த சிகிச்சைகளை இம்மருத்துவமனை அளிக்கிறது. வரும் காலங்களில் மருத்துவ சிகிச்சை மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு உள்ளிட்டவற்றில் புதிய அளவீடுகளை நிர்ணயிக்கும் மையமாக பார்வதி மருத்துவமனையின் செயல்பாடுகள் உயரும். நோயாளிகளுக்கு மிகச் சிறந்த மருத்துவ சேவையை மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலமாக அளிப்பதில் இந்தியாவிலேயே இம்மருத்துவமனை சிறந்து விளங்குகிறது. சிறந்த மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் சிறந்த மருத்துவர்களை தன்னகத்தே கொண்டு மிகச் சிறப்பான, வெற்றிகரமான அறுவை சிகிச்சைகளையும் இம்மருத்துவமனை செயல்படுத்தி வருகிறது.

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *