பாண்டே பதவி விலக, இதுவா காரணம்? 

ரங்கராஜ் பாண்டேவின் பதவி விலகலுக்குக் காரணமாக தற்போது புதுக் காரணம் ஒன்று சமூக வலைதளங்களில் உலாவர ஆரம்பித்துள்ளது. அது என்ன தெரியுமா ?

தந்தி டிவியின் தலைமை செயல் ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே சில நாட்களுக்கு முன்னர் திடிரெனத் தனது பதவியை ராஜினாமா செய்தது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமானது. இந்த ராஜினாமாவுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு விவாதமாகின. இதனால் பாண்டே ஒரு வீடியோ மூலம் தனது முடிவுக்கு விளக்கம் அளித்திருந்தார்.

அந்த வீடியோவில் ‘ நான் தந்தி டி.வியின் தலைமை செய்தி ஆசிரியர்பதவியில் இருந்து விலகிஇருக்கிறேன்ஆனால்ஊடகத்துறையில் இருந்துவிலகவில்லைதொடர்ந்து ஒரேவேலையை செய்வதால் ஏற்படும்அயர்ச்சியின் காரணமாகதான்எடுத்துள்ளேன்தந்தி டிவிகுழுமத்தோடு எனக்கு எந்தபிரச்சனையும் இல்லைஇந்த முடிவைதந்தி குழுமமும் பெருந்தன்மையாகஏற்றுக்கொண்டதுஇது புரிதலோடுஎடுக்கப்பட்ட ஒரு பிரிதல்.’ எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் பாண்டே ராஜினாமாவுக்குக் காரணம் ஆளும் அதிமுக அரசு சார்பில் தந்தி தொலைக்காட்சிக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தமே காரணம் எனக் கூறப்படுகிறது. அதனால்தான் நோட்டிஸ் பீரியட் கூட வேலை செய்ய அனுமதிக்காமல் உடனே பதவி நீக்கம் செய்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த செய்திக்குப் போட்டியாக தற்போது புதுக் கருத்து ஒன்று சமூக வலைதளங்களில் உலாவர ஆரம்பித்துள்ளது. அதில் ரஜினியின் கட்சியில் ஆலோசராக ரங்கராஜ் பாண்டே சேர இருக்கிறார் அதனால்தான் தந்தி டிவி யில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாகக் கருத்துகள் பரவத்தொடங்கியுள்ளன. ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் அந்த தகவல் உண்மையில்லை என அறிவித்துள்ளார்.

பாண்டேவின் ராஜினாமாவுக்குப் பல்வேறு கருத்துகள் கூறப்பட்டு வரும் சூழ்நிலையில் உணமைக் காரணம் என்னவென்று காலமேப் பதில் சொல்லவேண்டும்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *