“புல்லட் ராஜா” போட்டியில், புல்லட் வழங்கிய “ஸ்ரீலெதர்ஸ்” நிறுவனம்.. 

ஸ்ரீலெதர்ஸ் வழங்கும் “புல்லட் ராஜா” போட்டி திட்டம் –  வெற்றி பெற்றவர்களுக்கு புத்தம் புது புல்லட் 350 சிசி மோட்டார் சைக்கிள்

இதுகுறித்து திரு. சுஷாந்த்தோ டே, பங்குதாரர் , ஸ்ரீலெதர்ஸ் கூறுகையில், இப்போட்டி திட்டமானது வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் மேலும் கிளைகள் திறக்க திட்டமிட்டுள்ளோம்.

ஸ்ரீலெதர்ஸ், சிறந்த ஸ்டைல்களில் காலணிகள் வழங்கும் முன்னணி தொடர் நிறுவனம், தனது “புல்லட் ராஜா” போட்டி திட்டத்தின் வெற்றியாளர்களை இன்று அறிவித்தது. இந்த நிகழ்ச்சியில், திரு. சேகர் டே, பங்குதாரர், ஸ்ரீலெதர்ஸ் மற்றும் திரு. சுஷாந்த்தோ டே, பங்குதாரர், ஸ்ரீலெதர்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டி திட்டத்தில் வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் ஒரு புத்தம் புது புல்லட் – 350 சிசி மோட்டார் சைக்கிளினை வழங்கி சிறப்பித்தனர். சென்னை மற்றும் பெங்களூரில் நடைபெற்ற இப்போட்டி திட்டத்தில் சுமார் 10,000 த்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் தி.நகரை சேர்ந்த திரு. எம். பிரசன்னா  மற்றும் புரசைவாக்கத்தை சேர்ந்த திரு. ஆல்ஃபிரட் ஜோசப் ஆகியோர் “புல்லட் ராஜா” போட்டி திட்டத்தில் வெற்றியாளர்களாக திகழ்ந்தனர்.
திரு. சுஷாந்த்தோ டே, பங்குதாரர், ஸ்ரீலெதர்ஸ் கூறுகையில், “இப்போட்டி திட்டமானது வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. சென்னை மற்றும் பெங்களூரில் சுமார் 10,000 பேர் இப்போட்டி திட்டத்தில் கலந்து கொண்டனர். கடந்த பண்டிகை காலத்தில், எங்களிடம் காலணிகள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு எங்கள் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம். “புல்லட் ராஜா” போட்டி திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து வரும் காலங்களில் மேலும் பல போட்டி திட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். இது தவிர, பண்டிகைகால சலுகைகள், தள்ளுபடிகள், தன்னிகரற்ற வாடிக்கையாளர் சேவை போன்றவையே எங்களை சென்னையின் மிகசிறந்த காலணி தொடர் ஷோரூம் மாக திகழ செய்து வருகிறது. சென்னையில் மேலும் ஷோரூம்களை திறக்கவும் திட்டமிட்டுள்ளோம்.” 
கடந்த பண்டிகை காலத்தில், ஸ்ரீலெதர்ஸ் நிகழ்த்திய முதல் போட்டி திட்டமாக திகழ்ந்த, “புல்லட் ராஜா”, சென்னை மற்றும் பெங்களூரு வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றது. சென்னையில் தி.நகர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய ஷோரூம்களிலும் பெங்களூரு ஷோரூமிலும் போட்டி திட்டம் நடைபெற்றது. ரூ. 999 க்கு மேல் காலணிகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் போட்டி திட்டத்திற்கு தகுதியானவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திரு. சேகர் டே, பங்குதாரர், ஸ்ரீலெதர்ஸ் மற்றும் திரு. சுஷாந்த்தோ டே, பங்குதாரர், ஸ்ரீலெதர்ஸ் ஆகியோர் போட்டி திட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களை பாராட்டினர். மேலும் நிகழ்ச்சியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *