கல்வி மையமான, நீரிழிவு சிகிச்சை.. 

உயர் இரத்த  அழுத்தம் மற்றும் நீரிழிவின் மீது புரொபசர் விஸ்வநாதன் தங்கப்பதக்க பேருரை!

ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் நிகழ்த்தப்பட்டது 

நீரிழிவு சிகிச்சையில் புகழ்பெற்ற நிபுணர்கள்  நீரிழிவு மீது மக்களுக்கு தெளிவான விளக்கமளித்தனர் 

அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நீரிழிவு சிகிச்சை பிரிவால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட முதல், எம் விஸ்வநாதன் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி தங்கப்பதக்க பேருரை நிகழ்வில் நீரிழிவியல் துறையைச் சேர்ந்த முதுநிலை நிபுணர்கள் பங்கேற்றனர். புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களான, டாக்டர். பொன்னம்பல நமசிவாயம், டீன் – அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, டாக்டர். D. சாந்தாராம்-தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், டாக்டர். வி. மோகன், தலைவர் – டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம், டாக்டர். வி. சேஷையா, மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியின் நீரிழிவுத்துறையின் முன்னாள் தலைவர் மற்றும் டாக்டர். சண்முகம் ஆகியோர் இந்நிகழ்வில் உரையாற்றினார். நீரிழிவுத்துறையில் தங்களது அனுபவம் மற்றும் கண்ணோட்டங்களை பங்கேற்பாளர்களோடு பகிர்ந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து ‘நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் : இரட்டை சவால்’ என்ற தலைப்பு மீது சிறப்பு பேருரை நிகழ்த்தப்பட்டது. புரொபசர் எம். விஸ்வநாதன், ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி பேருரை நிகழ்வை முதன்முறையாக, அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியின் முன்னாள் டீன் டாக்டர். ஐசக் கிறிஸ்டியன் மோசஸ் அவர்கள் வழங்கினார். 

மறைந்த புரொபசர் விஸ்வநாதன் அவர்களது நினைவைப் போற்றும் வகையில், புரொபசர் எம் விஸ்வநாதன் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி தங்கப்பதக்க பேருரை  விருது ஒவ்வொரு ஆண்டும், நீரிழிவியல் துறையில் ஆராய்ச்சி, மருத்துவ சேவை மற்றும் மேம்பாட்டுக்காக சிறப்பான பங்களிப்பு செய்யும் நபருக்கு வழங்கப்படுகிறது. 

இந்நிகழ்ச்சியின்போது பேசிய டாக்டர்.  மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவரும் மற்றும் புரொபசர் எம் விஸ்வநாதன் அவர்களின் மூத்த மகனுமான டாக்டர். வி. மோகன், “1948ஆம் ஆண்டில் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில்  இந்தியாவின் முதல் நீரிழிவு  சிகிச்சை மையத்தில் எனது தந்தை புரொபசர் எம். விஸ்வநாதன் தொடங்கியதன் காரணமாக, நீரிழிவியல் சென்னை மாநகரில் உதயமானது. இதன் காரணமாக சென்னை மாநகரமும் ஸ்டான்லி மருத்துவமனையும் உண்மையிலேயே பெருமை பாராட்டலாம். இந்த நீரிழிவு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் இத்தருணத்தில் புரொபசர் எம். விஸ்வநாதன் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த நீரிழிவு சிகிச்சை மையம் இப்போது, நீரிழிவு கல்வி மையமாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதை காண்பது அதிக திருப்தியளிக்கிறது. 
இந்தியாவின் ‘நீரிழிவுத்துறையின் தந்தை’ என்று பரவலான அங்கீகாரம் பெற்றிருப்பவரும் மற்றும் காலஞ்சென்ற எனது தந்தையுமான புரொபசர் எம். விஸ்வநாதன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் இந்த பேருரை நிகழ்வை நடத்த டாக்டர். ஏ. சண்முகம் மற்றும் இம்மருத்துவக்கல்லூரியின் நிர்வாகிகள் ஆர்வத்தோடு முன்வந்திருப்பது பெரிதும் பாராட்டுக்குரியது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி! 

இன்ஸ்டிடியூட் ஆஃப் டயாப்பட்டலாஜி, நீரிழிவியல் துறையில் செய்திருக்கும் மிகச்சிறப்பான பங்களிப்புக்காக டாக்டர். ஐசக் கிறிஸ்டியன் மோசஸ் அவர்களுக்கு முதல், புரொபசர் எம் விஸ்வநாதன் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி தங்கப்பதக்க பேருரை விருதை வழங்கி கௌரவித்தது. ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியின் முன்னாள் டீன் டாக்டர் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ், இதன் மூலம் புரொபசர் விஸ்வநாதன் தங்கப்பதக்கத்தை பெறும் முதல் நபர் என்ற பெருமையை பெறுகிறார். அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நீரிழிவுத்துறையை, இன்ஸ்டிடியூட் ஆஃப் டயாப்பட்டாலஜி என  தரம் உயர்த்தப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடங்கியதில் இவர் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. போதுமான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஒரு புதிய, பிரத்யேக பிரிவுடன் இந்த இன்ஸ்டிடியூட் முன்னேற்றம் காண்பதற்கும் இது வழிவகுத்திருக்கிறது. 

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *