மனைவியை வர்ணித்ததால் நடந்த கொலை 

நீலகிரியில் நண்பரின் மனைவியை வர்ணித்ததால் அவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது நண்பர் பாரதி என்பவருடன் முருகனை தரிசிக்க பழனிக்கு சென்று அங்கு மொட்டை அடித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

 

பின்னர் இருவரும் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி மது அருந்தியுள்ளனர். மது அருந்திக்கொண்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பாரதி, ராமச்சந்திரனிடம் உன் மனைவி செம அழகாக இருக்கிறாள். தயவு செய்து அவளுடன் சண்டையிடாதே. உனக்கு கிடைத்த மனைவி போல யாருக்கும் கிடைக்கமாட்டார்கள் என பேசியுள்ளார்.

 

என் மனைவி பற்றி பேசாதே என ராமச்சந்திரன் கூறியுள்ளார். ஆனாலும் விடாத பாரதி, நண்பன் மனைவியின் அழகை பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், பாரதியை கொலை செய்துவிட்டார்.

 

பின்னர் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என நாடகமாடியுள்ளார். போலீஸார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் அனைத்து உண்மைகளும் அம்பலமானது. இச்சம்பவம் நீலகிரி பகுதியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *