மூத்த பத்திரிகையாளர் மீது தாக்குதல் ஏன்? அடுத்து என்ன? 

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்பு படுத்தி கட்டுரை எழுதியதால், அவர் மீது 124A பிரிவில் வழக்கு தொடரப்பட்டது. ஆளுநரை பணி செய்ய விடாமல் அவர் தடுத்ததாகவும் வழக்கப்புதிவு செய்யப்பட்டது.

ஆனால் 124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபாலை கைது செய்யப்பட்டதில் முகாந்திரம் இல்லை. அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முடியாது எனக்கூறி நக்கீரன் கோபாலை நீதிபதி கோபிநாத் விடுதலை செய்து உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட கோபால், சிறைக்கு செல்லாமலேயே விடுதலை செய்யப்பட்டார்.

தற்பொழுது மீண்டும் மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

மேலும் மர்ம நபர்களின் துப்பாக்கி சூட்டில் இருந்து உயிர் தப்பியுள்ளார். தன்னை தாக்கியவர்களில் இரண்டு பேர் அரசு அதிகாரிகள் என அன்பழகன் கூறியுள்ளார். மத்திய, மாநில அரசின் ஊழல்களையும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழல் பட்டியலை தக்க ஆதாரத்தின் அடிப்படையில் தொடர்ந்து மக்கள் செய்தி மையத்தின் மூலம் அன்பழகன் வெளியிட்டு வருகிறார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தூண்டுதலின் பேரில்  தான்  கோவை,ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்தில் பொய்யாக புகார் பதிவு செய்யப்பட்டு வழக்கு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அமைச்சர் வேலுமணி மீது 10க்கு மேற்பட்ட ஊழல் புகார்களுக்கு ஊழல்தடுப்புஇயக்குநரகம் வழக்கு பதிவு செய்ய தலைமை செயலாளருக்கு பரிந்துரை செய்திருந்தார் அன்பழகன். இதனால் அவரை பழி வாங்கும் நோக்கத்தில் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அன்று நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதை, அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிக்கையாளர்கள் சங்கம் உட்பட பல பத்திரிக்கையாளர் சங்கங்கள் வண்மையாக கண்டித்தன. நீதிமன்றமும் கண்டனத்தை தெரிவித்து உடனடியாக விடுதலை செய்தது. 

இன்று அது போன்று அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிக்கையாளர்கள் சங்கம் உட்பட பல பத்திரிக்கையாளர் சங்கங்களும் பல சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நீதிமன்றமும் இதை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பத்திரிகையாளர்களுக்குள் (கோபால், அன்பழகன்) பல மாற்று கருத்துக்கள் இருக்கும், ஆனால் ஊடகம் என்ற ஓர் குடையின் கீழ் தான் இருவரும் பயணிக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. 

ஒரிரு தனி நபர்களின் தூண்டுதலின் பேரில்தான் காவல் துறையினர் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். மீண்டும் அசிங்கப்படப்போவது காவல் துறையினர் தான். 

ஒன்றுபடுவோம், காவல்துறையின் இந்த அடக்குமுறையை ஒடுக்குவோம்.. பேனா முள்ளை எடுத்து உங்கள் கண்களில் குத்திக்கொள்ள வேண்டாம் என காவல்துறையை எச்சரிக்கிறோம்.. தமிழ்நாட்டு டுடே செய்தி குழு… 

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *