செய்தி எதிரொலி : சீர்மிகு பணியில் வடிகால் வாரியம்.. 

பல மாதங்களாக, ஆர்.கே.நகர்: சத்தியமூர்த்தி தெரு, வார்டு47 மண்டலம்4 இப்பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகால் உடைந்து அபாயநிலையில் இருந்தது. இப்பகுதி மக்கள் பலமுறை கழிவுநீர் வடிகால் வாரியத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.எனவே உடைந்த கழிவுநீர் வடிகாலை உடனடியாக சீர்செய்யக்கோரி பொதுமக்கள் புகார் அளித்தனர். இதை பொதுமக்களின் முக்கிய பிரச்சனையாக கருதி, நமது tamil nadu today.tv செய்தி வெளியிடப்பட்டது. 

tamil nadu today.tv செய்தியை, அது சம்பந்தமான அதிகாரிகள் பார்வைக்கு தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளும், மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க, உடனடியாக சீரமைத்து வருகின்றனர். 

நமது செய்தியின் எதிரொலியாக, கழிவுநீர் வடிகால் வாரியம் உடைந்த கழிவுநீர் வடிகாலை சீற்செய்வதை படத்தில் காணலாம்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *