காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து? 

சமீபகாலமாக காவல்துறை உயரதிகாரிகள் பொதுமக்கள் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். CCTV அதிகளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருது, அவசர உதவி சேவை, என பல்வேறு பாராட்டுக்குறிய செயல்களை செய்து வருகின்றனர்.

ஆனாலும் சில அதிகாரிகள், குற்றவாளிகளுக்கு உதவி செய்து சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

J 9 துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் முக்கிய பிரமுகரின் விலையுயர்ந்த வாகனம், கடந்த 8 மாதகாலத்திற்கு முன்பு இன்னொருவர் இந்த வாகனத்தை வாங்குவதாக கூறி முன்பணமாக கொஞ்சம் மட்டும் தந்துவிட்டு, விலையுயர்ந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். தற்போது அந்த வாகனம், வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட, வேறு மாநிலத்தில் சிறையில் உள்ள குற்றவாளியின் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வளசரவாக்கம் காவல் ஆய்வாளரோ, உங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என்று கூறி அனுப்பி விட்டார்கள். அதன் பிறகு கடந்த 14.01.2019 அன்று துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆணையரிடம் புகார் மனு அளித்தனர். அதை விசாரித்த உதவி ஆணையர், துரித நடவடிக்கை எடுக்கும் படி குற்றப்பிரிவு ஆய்வாளர் சரவணன் வசம் ஒப்படைக்கப்பட்டது. 

புகாரை பெற்ற ஆய்வாளர் புகார் அளித்தவர்களை மிரட்டும் தோரணையில் செயல்பட்டார். உடன் வந்த செய்தியாளர்கள் வீடியோ பதிவு செய்வதை ஆய்வாளர் அறியவில்லை. 

முன்பு ஒரு முறை இதேபோல் வீடு குத்தகை சம்பந்தமாக புகார் வந்தபோது, அதை CSR பதிவு செய்யாமல் காவல் நிலையத்திலேயே பஞ்சாயத்து பேசியுள்ளார். இவரது மிரட்டலுக்கு பயந்து குத்தகை பணம் அளிக்கப்பட்டு விட்டது.  நீதிமன்றத்தில் தீர்க்க வேண்டிய பிரச்னையை, கணிசமான பணம் இரு தரப்பிலும் பெற்றுக்கொண்டு CSR போடமலே கட்டப்பஞ்சாயத்து முறையில் தீர்ப்பு வழங்கியுள்ளார். 

அதேபோல் தற்போது வாகனம் சம்மந்தமான புகார் அளிக்க வந்தபோது, பழைய குத்தகை சம்பந்தமாக வட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். 

அதன் பிறகு வாகனத்தை ஏமாற்றி எடுத்து சென்றவருக்கு போன் செய்து தனிப்பட்ட முறையில் வரவழைத்து, சமரசம் பேசி எழுதி வாங்கி கொண்டு அனுப்பிவிட்டார். எதிராளியோ, வாகனத்தை வைத்து பல லட்சங்கள் பெற்று, தலைமறைவாக வாழ்பவர் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாகனம் எங்கு மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிட்டுள்ளது. 

உங்கள் புகாருக்கு தற்பொழுது துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் CSR பதிவு செய்யும் இயந்திரம் பழுதாகி விட்டது, அதனால் கையில் எழுதி தர இயலாது என்று கூறி விட்டார். 

இதை சட்டப்படி விசாரித்து, புகாருக்கு CSR பதிவு செய்யாமலும், 8 மாதமாக மறைத்து வைத்துள்ள வாகனம் யாரிடம் உள்ளது என்று விசாரிக்காமலும், காவல் நிலையத்தில் பஞ்சாயத்து நடத்தியுள்ளார். இதனால் வாகன உரிமையாளர் மேலதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *