மக்கள் செய்தி மய்யத்தின் தில்லாலங்கடி வேலை!..

ஊடகத்துறையில் போலிகளின் களையெடுப்பு துவங்கிவிட்டது. ஆங்காங்கே அதிகாரிகள் சோதனை, சூடுபிடித்திருக்கிறது. இதனால் பல போலி நிருபர்கள் நடுக்கத்தில் உள்ளனர்.

பெரிய நிறுவன மீடியாக்களில் உள்ள செய்தியாளர்களோ, வேலைக்கு அமர்த்தப்பட்டு, அவர்கள் தரும் வேலையை செய்து சம்பளம் பெறுபவர்கள்.. தன்னிச்சையாக செயல்பட முடியாதவர்கள். ஆனால் அதிகாரிகளிடம் இருந்து இவர்களுக்கு மரியாதையும், கிம்பளமும் அதிகம் கிடைக்கிறது.

சிறிய நிறுவன மீடியாக்கள் மற்றும் சிறு நிறுவன பத்திரிகைகளில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு சிலருக்கு குறைந்த சம்பளமும், பலர் சம்பளம் வாங்காமலும் உள்ளனர்.

நிறுவனத்திற்கு இவர்கள் தரும் செய்திகள் அனைத்தும் வெளியாகிறது. ஆனால் இவர்களுக்கு, அதிகாரிகள் மரியாதை தருவது இல்லை.

பல வருடங்களாக பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர்களுக்கு, உதவிகள் மறுக்கப்படுகிறது. பலர், ஏன் பத்திரிகைதுறைக்கு வந்தோம் என்ற வேதனையில் உள்ளனர். இவர்களுக்கு தேவையான உதவிகளை, இதுவரை எந்த சங்கங்களும் போராடி, பெற்று தந்தது இல்லை. 

நேற்று, மக்கள் செய்தி மய்யம் என்ற இணையதளத்தில் புரட்சி தலைவி இதழ் குறித்து ஒர் செய்தி வெளியானது. அதில்  சித்திக் என்பவர் அரசு ஊடக அடையாள அட்டை விற்பனை செய்கிறார் என குறிப்பிட்டுள்ளது. 

பத்திரிகையாளர் குடும்பத்தில் பிறந்த, இன்று வரை ஊடக பணியாற்றி வரும், அடுத்த வேளை உணவு இல்லாமல் கஷ்டப்படும் மூத்த பத்திரிகையாளர் தான் சித்திக். மாதம் ஆயிரம் ரூபாய் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 

மக்கள் செய்தி மய்யம் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது போல் அனேகரிம் ரூபாய் 15,000 வீதம் பெற்றிருந்தார் என்றால், ஆதாரத்துடன் செய்தி பதிவு செய்ய வேண்டும். 

மக்கள் செய்தி மய்யம் இணையதளத்தின் அட்மின் அன்பழகன் என்பவர், கடந்த காலங்களில் சில முக்கிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். அரசுக்கு எதிரான செய்தி வெளியிட்டு, சிறைக்கு சென்றுள்ளார். சன் நியூஸ், இவரை போலி பத்திரிக்கையாளர் கைது என கூறியது. இதை கண்டித்து, பல ஊடகங்களும் அன்பழகனுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். 

அன்பழகன் என்பவருக்கு இதுவரை, சொந்தமாக அவரது பெயரில் பத்திரிகை இல்லை. சில பத்திரிகைகளில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு தனக்கென, மக்கள் செய்தி மய்யம். காம் என்ற பெயரில் இணையதளம் நடத்தி வருகிறார். இவர் நடத்தி வரும் இணையத்திற்கு, அரசு அடையாள அட்டை கேட்டதாக கூறப்படுகிறது. அரசு அதிகாரிகள் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர், வேறொரு இணையதளத்திற்கு வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து, அன்பழகன் தனது இணையதளத்தில் செய்திதுறையா.. மோசடிதுறையா.. என பல்வேறு ஆதாரங்களுடன் செய்தித்தொடர் வெளியிட்டு வந்தார். 

குறிப்பாக இதில், ஆறாவது தொடரில் (6), சித்திக் என்ற பெயரை ரித்திக் என்று எழுத்து பிழையுடன் 1.2.2019 அன்று ஒரு செய்தியை பதிவு செய்து இருந்தார். இதில், டாக்டர் புரட்சித் தலைவி என்ற இதழ் தொடர்ந்து வெளிவரவில்லை என்றும் அதற்கு அரசு அடையாள அட்டை வழங்கப்பட்டது என்று தகுந்த ஆதாரமில்லாமல் குறிப்பிட்டிருந்தார். 
இந்த பதிவை கண்ட பலர், அன்பழகனை தொடர்பு கொண்டு, டாக்டர் புரட்சித் தலைவி பத்திரிகை தொடர்ந்து வெளிவருகிறது என கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து, இணையதளத்தில் தான் பதிவு செய்த செய்தியை நீக்கியுள்ளார் அன்பழகன். 

அன்பழகன் செய்தது தவறு என சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், நீக்கிய பதிவை, மீண்டும் இன்று (3.2.2019) பதிவு செய்துள்ளார்.


 

செய்தி வெளியிட்டு, அதில் பிழை இருந்தால் சரி செய்து மாற்று செய்தி வெளியிட வேண்டும். அதுவே ஊடக தர்மம். 

அச்சு, ஒளி ஊடகங்களில் செய்திகளை நீக்க முடியாது. இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்யவும், நீக்கவும், மீண்டும் பதிவு செய்யவும் முடியும். இதன்மூலம் டாக்டர் புரட்சித் தலைவி இதழ் பற்றிய செய்தியை மீண்டும் இன்று பதிவு செய்துள்ளார்.

பின்னர் அன்பழகன், கடந்த 8 ஆண்டுகளில் எந்த செய்தியையும் நீக்கியது இல்லை என்று தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அன்பழகன் கூறுவது அப்பட்டமான பொய் என்பதற்கான ஆதாரங்களை, தமிழ்நாடு டுடே செய்தி குழு வெளியிடும் என்று அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆதாரம் 1.   1.2.2019 அன்று வெளியிட்ட முகநூல் பக்க செய்தி. 

ஆதாரம் 2. நீக்கிய பின் 3.2.2019 இன்று செய்துள்ள பதிவு.

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *