பத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் தேவையா?.. 

ஊடகம் என்பது சமூக சேவை மனப்பான்மை கொண்டது. ஊடகத்தை வருமானம் ஈட்ட கூடிய தொழிலாகவும் நடத்தலாம். சமூக சேவை செய்யும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் தான் ஊடகம். இவர்கள் நினைத்தால் ஒரு அரசையே கவிழ்க்க முடியும், அரியணையில் அமர வைக்கவும் முடியும். ஊடகத்தை விமர்சனம் செய்ய பல தலைவர்கள் நடுங்குகிறார்கள். விமர்சனம் செய்தவர்கள், அடையாளம் தெரியாமல், நடைப்பிணமாக வாழ்கிறார்கள். செல்வந்தர்கள் முதல் அடித்தட்டு மக்கள் வரை, பிரபலமாக ஊடகம் ஒரு முக்கிய காரணம்.

ஊடகத்தை தொழிலாக செய்பவர்கள், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, பணம் சம்பாதிக்க எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் செயல்படும். அதாவது, அரசுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் செய்தி வெளியிட்டு, பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார்கள். சேவை செய்ய வந்தவர்கள், தன்னிடம் பணம் உள்ளவரை நடத்துகிறார்கள்.

ஊடகத்துறையில் பல ரகம் உண்டு. சொற்ப பணத்தில், ஊடகத்தை பதிவு செய்து, அடையாள அட்டை விற்பனை செய்யும் கூட்டம். அரசு அதிகாரிகள் மற்றும் செல்வந்தர்களை மிரட்டியும், ஜால்ரா அடித்தும் பிழைப்பு நடத்தும் கூட்டம். என பல்வேறு தரப்பினரும் ஊடகத்துறையில் உள்ளனர்.

மேற்கண்ட ஊடகத்துறையை சார்ந்தவர்களை, ஒருங்கிணைத்து சங்கம் என்ற பெயரில் பிழைப்பு நடத்தும் பலர் உள்ளனர். இப்படி பட்ட சங்க தலைவர்களிடம் சொந்தமாக பத்திரிகை பதிவு செய்து வைத்திருக்கவில்லை. அப்படியே வைத்து இருந்தாலும், அரசு அதிகாரிகள் மற்றும் செல்வந்தர்களை மிரட்டியும், ஜால்ரா அடித்து மட்டுமே செய்தி வெளியிடுவார்கள். இன்னும் சிலர், பத்திரிகையை நடத்தாமல் வீட்டில் வைத்து பூஜை செய்து வருகின்றனர். வேறுசில தலைவர்களோ, சங்கத்தை செயல்படுத்தாமல், சங்க அடையாள அட்டையை ஐநூறு ரூபாய்க்கும், ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்து ஈனத்தனமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களையெல்லாம் நம்பி, சங்கத்தில் இணைந்த உறுப்பினர்களுக்கு, அரசின் கதவை தட்டி எந்த உதவியையும், உரிமையையும் பெற்று தந்ததில்லை. உரிமைக்கு போராடி, சிறை சென்றதில்லை. ஒரு சங்க உறுப்பினர் தாக்கப்பட்டாலோ, போலி பத்திரிகையாளர் என பொய் செய்தி வந்தாலோ, இன்னொரு சங்க தலைவருக்கு மகிழ்ச்சி. ஒரு சாதாரண பாமர மனிதர்கள், சமூகத்தின் மீது அக்கறை கொண்டு ரத்த தானம், மருத்துவ முகாம், விருதுகள், பட்டம் வழங்குதல் போன்ற பலவற்றை செய்து வருகின்றனர்.

ஊடகத்துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமே சேவை செய்ய வேண்டி, துவங்கியது தானே ஊடக சங்கங்கள்? அதை செய்கின்றதா? என்றால், இல்லை. உறுப்பினர்களுக்கு, சங்க தலைவர்கள் செய்த மிகப்பெரிய சேவை ஒன்றே ஒன்றுதான். 300 ரூபாய்க்கும் உட்பட்ட தனிநபர் இன்சூரன்ஸ் வழங்குவது மட்டும் தான். ஆனால் விளம்பர படுத்துவதோ லட்சக்கணக்கான ரூபாய் இன்சூரன்ஸ், இலவசமாக வழங்கினோம் என்று.

பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டால், துணை நிற்காத சங்கங்கள் எதற்கு? அரசிடமிருந்து உதவி பெற்று தராத சங்கங்கள் எதற்கு? நடுநிலை என்ற பெயரில் அரசுக்கு ஜால்ரா அடிக்கும் சங்கங்கள் எதற்கு? என பல்வேறு கேள்விகளை முன்வைத்து, தமிழ் கலாச்சாரம் காக்க, சென்னை மெரீனா கடற்கரையில் ஒன்று கூடிய தமிழர்களை போல,

ஊடக உரிமையை காக்க, உணர்வுள்ள, உண்மையான பத்திரிகையாளர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டது தான், ஊடக உரிமைக்குரல் என்ற வாட்ஸ்அப் குழு.

கடந்த மாதம், குடியரசு தினமான 26 ஆம் தேதி அன்று தான் ஊடக உரிமைக்குரல் துவங்கியது. துவங்கி ஒரே வாரத்தில் அமோகமான ஆதரவை பெற்றது. இந்த குழுவில் பல மாவட்டங்களை சேர்ந்த முகம் பார்த்திராத பத்திரிகையாளர்கள் பலர் உள்ளனர். ஊடக உரிமையை பெற, தமிழகத்தில் உள்ள சங்கங்களை சாராமல், அனைத்து பத்திரிகையாளர்களையும் ஒருங்கிணைத்து, மாபெரும் போராட்டம் நடத்த முடிவு செய்து, அதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஊடக உரிமைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, 

திருச்சியில் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளனர். நமக்காக நாம் தான் போராட வேண்டும் என முடிவு செய்து, ஊடக உறவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் குழுவில் உள்ள உணர்வுள்ள பத்திரிகையாளர்கள் அனைவரும் வரவேற்பு விளம்பரம் செய்து வருகின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டம் தேவையா? ஆலோசனை கூட்டத்தில் என்ன நடக்கபோகிறது? எதை நோக்கி செல்கிறது இந்த குழு? என பல பத்திரிகையாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இதற்கான பதில், வரும் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள கூட்டத்தில் மட்டுமே தெரியும்..

News Reporter

5 thoughts on “பத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் தேவையா?.. 

  1. அருமையான பதிவு நண்பரே உண்மை யை உரக்க குரல் கொடுப்போம் சிறு பத்திரிகையாளர்கள் பெரிய நிறுவனங்கள் என பேதம் இல்லாமல் அணைவரும் ஓரே செய்தியாளர்கள் தாண் என ஓரே குடையின் கீழ் கொண்டு வருவோம் நம் ஒற்றுமையை வளர்ப்போம்

    1. உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
      ஒன்றுபடுவோம் உரிமையை மீட்டெடுப்போம். 7010654101

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *