CHENNAI PRESS CLUB பாரதிதமிழன் தீவிரவாதியா? 

அடிமேல் அடி வாங்குகிறார்கள், பத்திரிகையாளர்களை, அரசு கண்டுகொள்வதில்லை. பெரிய நிறுவன மீடியாக்களில், போலி நிருபர்கள் என செய்திகளை வெளியிடுவார்கள், எதிர்த்து கேட்க யாருமில்லை.

சிதறி கிடந்த சங்கங்கள், கூட்டமைப்பாய் இணைந்தார்கள். ஆனால், யாரோ சதி செய்து பிரித்து விட்டார்கள்.
பெரிய சங்கங்களின் பொறுப்பாளர்களோ, மகிழ்ச்சியாக உள்ளனர். அடித்தட்டு உறுப்பினர்களோ, தாக்கப்பட்டால் யாரும் இல்லையே என துன்பத்தில் உள்ளார்கள்.
எந்த சங்கங்களிலும், உறுப்பினர் கூட ஆகாத, பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு சின்ன பிரச்னை என்றாலும், அனைத்து சங்கங்களும் முதல் குரல் ஒலிக்கிறது.
சிறிய நிறுவன பத்திரிகைகளில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு, பாதிக்கப்பட்டு ரத்தமே வந்தாலும், கண்டுகொள்வதில்லை.

தற்பொழுது சங்க தலைவர்கள் சிலர், பத்திரிகையாளர்களுக்காக போராடி வருகின்றனர். இது பத்திரிகையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.


இந்நிலையில், நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில், பத்திரிகையாளர்களை காவலர்கள் தாக்கினர். இதில், பெரிய நிறுவனங்களின் செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர். இதை கண்டித்து, பல மாவட்டங்களில் அனைத்து பத்திரிகையாளர்கள் இணைந்து, நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாரதிதமிழன் 

சென்னையிலும் CHENNAI PRESS CLUB ல், அதன் இணைச்செயலாளர் பாரதிதமிழன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, அறிவிப்பு வெளியானது. 

இது வாட்ஸ்அப், பேஸ்புக்கில் பகிர பட்டிருந்தது. இதை கண்ட வெவ்வேறு சங்க தலைவர்களும், அதன் உறுப்பினர்களும் திரளாக வந்திருந்தனர்.
அனைவரும், சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தினுள் வரும் போது, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பத்திரிகையாளர்களே வெளியே போ! என குரல்கள் எழுந்தன. 
போராட்டத்திற்கு வந்தவர்களை, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் அல்லக்கைகள் மிரட்டினர். அதனால், போராட்டத்திற்கு வந்த பிற சங்கங்களின் தலைவர்களான, சுபாஷ், வேல்முருகன் மற்றும் ரஞ்சித் போன்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் அன்பழகன் அவர்கள், மன்ற கட்டிடத்தின் உள்ள இருந்தார்.

போராட்டம் நடத்த ஏற்பாடு செய்த சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதிதமிழன் பார்த்து, ஏன் வெளியே போக சொல்கிறீர்கள், என்ற காரணத்தை கேட்டதும், போராட்டம் நடத்த வந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த முழு தகவல்கள் என்னவென்றால்,


சில பெரிய நிறுவனங்களில் நிருபராக வேலைபார்த்த, தற்போதைய சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதிதமிழன் என்பவரால் தான், இந்த பிரச்சினை வந்துள்ளது.

சென்னை பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்கள் மட்டுமே, பத்திரிக்கையாளர்களுக்கு போராட்டம் நடத்துவோம். நீங்களெல்லாம் வெளியே போங்க என அனைத்து பத்திரிகையாளர்களையும் விரட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த மற்ற சங்க தலைவர்கள், மன்ற கட்டிடத்தின் உள்ள இருந்த அன்பழகன் அவர்களிடம் முறையிட்டனர். அப்படியா, என அதிர்ச்சி அடைந்த அவர், பாரதிதமிழனை கண்டித்தார். ஆனாலும் பாரதிதமிழனோ, அன்பழகன் அவர்களை மதிக்கவில்லை. காரணம் என்ன என்று கேட்டதற்கு, மன்ற உறுப்பினர்கள் மட்டுமே போராட்டம் நடத்துவோம் என அடம்பிடித்தார். அப்போது சுபாஷ் அவர்கள் குறுக்கிட்டு, வேறு சங்க தலைவர் சகாயராஜ் மட்டும் உங்களுடன் கலந்து கொள்ளலாமா என்று கேட்டதற்கு, அவர் எங்க சங்க உறுப்பினர் என சிறுபிள்ளை போல பதில் கூறினார்.

இவற்றை எல்லாம் பொறுத்து கொள்ளாத அன்பழகன் அவர்கள், அனைத்து பத்திரிகையாளர்களும் எனக்கு முக்கியம் என்றும், இனி நீங்கள் நடத்தும் எந்த போராட்டத்திலும் நான் கலந்து கொள்ள மாட்டேன் என கூறி, புறப்பட்டு சென்றார். இதன் காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை போராட்டத்திற்கு அழைத்து வந்த சுபாஷ், வேல்முருகன், ரஞ்சித் மற்றும் விமலேஸ்வரன் ஆகியோர், அங்கிருந்து வெளியேறினர்.

இதுகுறித்து மேலும் ஆராய்ந்த போது,

பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, பெரும் புரட்சியை ஏற்படுத்துவார்கள் என, எதிர்பார்க்கப்பட்ட சென்னை போராட்டத்தில் பத்து உறுப்பினர்களும், சில எடுபிடிகளும் இருந்தனர். இதனால், மிகவும் எதிர்பார்க்கபட்ட, சென்னை போராட்டம் தோல்வி அடைந்தது.


இந்த போராட்டம் குறித்து அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது.


அதாவது.,

1… தாக்கப்பட்ட சன், நக்கீரன் செய்தியாளர்கள், சென்னை பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்கள் இல்லை..


2… இணைச்செயலாளர் பாரதிதமிழன், இவ்வளவு காலமில்லாமல், இந்த போராட்டத்தை பிற சங்கங்களுடன் இணைந்து நடத்த மறுத்தது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.


3… அனைத்து பத்திரிகையாளர்களையும் வரவழைத்து, உறுப்பினர்களின் முன்னிலையில் சங்க தலைவர்களை அவமானப்படுத்தியது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

4… பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைத்து போராடினால், வெற்றி கிடைத்துவிடும். பிறகு, பலம் வாய்ந்தவர்களால் தனது பதவிக்கு ஆபத்து ஏற்படும். சென்னை பத்திரிகையாளர் மன்ற பணத்தில் பிழைப்பு நடத்தும், பாரதிதமிழன், பிறகு எங்கு போவார்? எனவே தான், இந்த செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது..

5… ஒன்றுபட்டிருக்கும் பத்திரிகையாளர்களை பிரித்து, அவர்களுக்குள் தகராறு ஏற்படுத்தி, தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, முக்கிய செய்திகள் ஏதும் வெளிவராத வண்ணம், நான்காவது தூணுக்கு எதிரான தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார் என சில பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தினர்..

இந்நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு எதிராக, சில சங்கங்கள் போராட்டம் நடத்த போவதாகவும் கூறப்படுகிறது..


மேலும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் குறித்த அதிர்ச்சி தகவல்கள், அடுத்த பதிவில்……..

தொடர்புக்கு 7010654101 ……. 

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *