நடிகர்களை மிஞ்சும் பத்திரிகையாளர்கள்.. 

எங்கு சென்றாலும் மரியாதை. அரசியல்வாதிகள் நடுங்குவார்கள். காவல்துறையினர் அனைவரும் நண்பர்களாக இருப்பார்கள். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், அவரது பெயர் சொல்லி அழைப்பார்கள். 

இவை அனைத்தும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம். பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பாக உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வரம். அதாவது, பெரிய நிறுவனத்தில் வேலை பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வரம். 

சினிமாவில் வரும் கதாநாயகன், தனது சொத்தையே ஏழைகளுக்கு வாரி வழங்குவது போல நடிப்பார்கள். நிஜ வாழ்க்கையில் ஆடம்பரமாக தனக்கென செலவு செய்து வாழ்வார்கள். 

அதுபோல் பெரிய நிறுவன மீடியாக்களில் உள்ள பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்களை, சமூக ஆர்வலர்களை, விவாத மேடைக்கு வரவழைத்து, சமுதாய சீர்கேடுகளை குறித்து கேள்விகளை கேட்டு, திக்குமுக்காட செய்வார்கள். ஆனால் நிஜத்தில் அவர்கள் அப்படி அல்ல. சமூக பணியை மேடையோடு முடிந்து விடுவார்கள். 

பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டாலோ, பாதிக்கப்பட்டாலோ ஒரு கண்டனம் கூட தெரிவிக்க மாட்டார்கள். லஞ்சத்துக்கு சமமாக, இலவசமாகவே அனைத்து வசதிகளையும் பெற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள். பத்திரிகையாளர்கள் நலனுக்காக எந்த விவாதமும் செய்ய மாட்டார்கள். சமூக அக்கறை கொண்டவர்கள் போல கேள்வி மட்டும் எழுப்புவார்கள். சமூக அக்கறையுடன் செயல்பட மாட்டார்கள். ஏன் இப்படி என்று கேட்டால், நான் சம்பாதிக்க இந்த வேலையை செய்வதாக, நடிகர்களை போல பதில் கூறுவார்கள். 

இவர்கள் ஒருபுறம் இருக்க, பத்திரிகையாளர்களின் தலைவர்கள் என சிலர் உள்ளார்கள். பத்திரிகையாளர்கள் நலனுக்காக மேடையில் முழங்குவார்கள். சந்தா பணம் செலுத்தாத பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டால் கண்டனம் கூட தெரிவிக்க மாட்டார்கள். வசூல் செய்த பணத்தை தனது குடும்பத்தினருக்கு செலவு செய்து, மாலை மரியாதையுடன் வலம் வருவார்கள். 

இந்த இரண்டு வகையை சேர்ந்தவர்கள் தான், பத்திரிகையாளர்களின் துரோகிகள். சிறிய பத்திரிகையாளர்கள், பெரிய பத்திரிகையாளர்கள் என பேதம் பார்த்து, சதுரங்க வேட்டை ஆடுபவர்கள். பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒன்றிணைவதை விரும்பாதவர்கள். இவர்கள் அனைவரும் பத்திரிகையாளர்கள் மத்தியில் தான் இருப்பார்கள். 
ஆனால், பத்திரிகையாளர்கள் அனைவரும், ஊடக உறவுகளாய் இணைவதில் எவ்வளவு நன்மை உள்ளது என்பதை பத்திரிகையாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 

பத்திரிகையாளர்கள் ஒன்றுபட்டால், 
பத்திரிகை உறவுகள் உள்ள குடும்பத்தில் இன்ப நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்து கொண்டு, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் பெரும் வாய்ப்பு உள்ளது. 
துக்க நிகழ்வுகளில் கலந்து கொண்டு பத்திரிகை உறவுகளின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து ஆதரவாக இருக்க முடியும். 

பத்திரிகையாளர்கள் அனைவரும் இணைந்தாலே
போதும், அரசு நடுநடுங்கும். நல வாரியம் அமைத்து தரும். ஓய்வூதியம் அதிகரிக்கும். அனைவருக்கும் வீடு கிடைக்கும். இப்படி பட்ட பத்திரிகையாளர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். 

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் : 1…நான் பெரிய மீடியாவில் வேலை செய்கிறேன் என்ற குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்..
காரணம் : 2… பத்திரிகையாளர்களுக்கு சேவை செய்யவே சங்கம் ஆரம்பித்தேன் என கூறி கொண்டு, உறுப்பினர்கள் பணத்தை சம்பளமாக பெற்று, தலைவர் என்ற பெயரில் வேலை செய்ய வந்த பணியாளர்கள்..
முதலாவதாக உள்ளவர்களை பற்றி சில தகவல்கள் : நல்லவர்கள். பண்பானவர்கள். விசுவாசமானவர்கள். ஊடக தர்மத்தை விட முதலாளிகளின் ஆணைக்கு இணங்கி நடப்பவர்கள். தொழிலுக்கு மரணமே பரிசாக வந்தாலும் ஏற்றுக்கொள்பவர்கள். சங்கங்கள் சாராதவர்கள். அவர்களுக்காாகமட்டுமே  வாழ்பவர்கள். முக்கிய பொறுப்பில் இருந்தும், அமைதியாகவும், பத்திரிகையாளர்களுக்காக குரல் கொடுக்காமல் இருப்பவர்கள்.
இரண்டாவதாக குறிப்பிட்ட சங்க தலைவர்களோ, மிகவும் நல்லவர்கள். சேவை மனப்பான்மை கொண்டவர்கள். முறையாக சந்தா தருபவர்களுக்கு விசுவாசமானவர்கள். பிரபலமானவர்கள் நட்பை பெற ஆசைப்படுபவர்கள். தனது சங்க பெயரை விளம்பரப்படுத்த, ஊடகத்திற்கு சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி, புகைப்படங்கள் எடுத்து பதிவு செய்வார்கள். பிரபலமான ஊடகத்தை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டால், தனது சங்கத்தை சாராதவராக இருந்தாலும், கண்டன அறிக்கை மூலம் குரல் கொடுப்பவர்கள். தன்னை முன்னிலை படுத்தும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள். இதுவரை அரசிடமிருந்து எந்த உரிமைகளையும் பெற்று தராத வர்கள். பத்திரிகையாளர்களை பாதுகாக்க தான் சங்கம் என அறிந்தும், அறியாதவர்கள். 

திமுகவிற்கு, எழுத்துக்களால் தனது வாழ்நாளை அர்ப்பணித்த, குத்தூசி என்ற பத்திரிகையாளரின் இறுதி சடங்குகளை நக்கீரன் கோபால் அவர்கள், அவரது அலுவலகத்தில் செய்தார். அப்போது எங்கே போனார்கள் அரசியல்வாதிகள்?. ஆஞ்சநேயர் கோயில் பூசாரியின் இறப்புக்கு கிடைக்கும் மரியாதை கூட, பத்திரிகையாளர்களுக்கு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. 

இவற்றை எல்லாம் தாண்டி, பத்திரிகையாளர்கள் இணைவது சாத்தியமா? என்று கேள்வி எழுந்தது. 

தற்போது, ஆம். சாத்தியமே என, ஊடக உரிமைக்குரல் என்ற ஓர் வாட்ஸ்அப் குழு களமிறங்கியுள்ளது. 

அவர்கள் கூறுவது என்னவென்றால், 

ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் பல கட்சிகளில் உள்ளனர். அவர்களின் குடும்ப இன்ப துன்பங்களில், கட்சிகளை மறந்து ஒரு ஜாதியாக, இனமாக கலந்து கொள்கிறார்களே, அது போல, என்றும். 
பத்திரிகையாளர்களுக்கு, நாம் அனைவரும் ஊடக ஜாதி என்ற உணர்வு இருந்தால் சாத்தியமே, என்றும். 
வேறு பத்திரிகை சங்க நிகழ்வுக்கு செல்லும் உறுப்பினர்களை தடுத்து, பிரித்தாளும் சங்க தலைவர்களை கண்டித்தால் சாத்தியமே, என்றும். 
அரசு அளிக்கும் அடையாள அட்டை, இலவச பஸ் பாஸ், இலவச வீட்டு மனை பட்டா தருவதாக ஆசை வார்த்தை கூறி, பத்திரிகையாளர்கள் உறவுகளை பிரித்தாளும்  மக்கள் செய்தி தொடர்பு அலுவலரை கண்டித்தால் சாத்தியமே, என்றும். 
இதற்கு பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒருங்கிணைய வேண்டும். இதற்கான பயணத்தில், தனது சக பத்திரிகை உறவுகளை இணைக்க வேண்டும், என்றும் கூறுகிறார்கள். 
இதில் சில சங்க தலைவர்கள் உள்ளார்கள் என்றும், அவர்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள் என்றும், அவர்களுக்கு ஊடக உரிமைக்குரல் குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் என கூறுகிறார்கள். 
வருகிற மாார்ச் மாதம், 10 ஆம் தேதி, காலை 10 மணியளவில், திருப்பூரில் 
ஊடக உரிமைக்குரல் நடத்த போகும் ஆலோசனை கூட்டம், மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். 

  சென்ற முறை, திருச்சியில் நடைபெற்றது ஆலோசனை கூட்டம் அல்ல என்றும், உறவுகளின் அறிமுக கூட்டம்.அறிமுகமானோம்,என்றும், இனி ஆலோசனை செய்வோம் என்றும், 
முழுமையான ஆலோசனை கூட்டம் நடைபெற போவது, திருப்பூரில் தான் எனவும், 
கொடி காத்த மண்ணில், பத்திரிகையாளர்கள் உரிமைகளை காக்க, ஒன்றுபட்டு ஆலோசனை நடத்த போவதாக, கூறியுள்ளார்கள். 

திருப்பூரில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திற்கு, உதய்சிங் மற்றும் தமிழன் வடிவேல் மட்டுமே ஒருங்கிணைப்பாளர்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும். 
ஆலோசனை கூட்டத்திற்கு வருபவர்கள், மேற்கண்ட இருவரையும், குழுவிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ தொடர்பு கொண்டு, ஊடக உரிமைக்குரலின் கரத்தை வலுப்படுத்துங்கள், என்றும் கூறியுள்ளனர். 

மேலும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள :

உதயசிங் – 9444794445 தின அஞ்சல். தமிழன் வடிவேல் – 9445272820 நேஷனல் டுடே, ஆகியோரை தொடர்பு கொள்ளும்படி, கூறியுள்ளார்கள். 

பத்திரிகையாளர்கள் இதற்காக ..நமக்காக நாம்… என்ற பயணத்தை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் இந்த ஆலோசனை கூட்டம், தோய்வில்லாமல் தொடரும் என்றும் கூறப்படுகிறது.  

News Reporter

2 thoughts on “நடிகர்களை மிஞ்சும் பத்திரிகையாளர்கள்.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *