உண்மை செய்திகளை மறைத்த, பிரபல ஊடகங்கள்.. 

இதற்காக செய்தி துறையையா பயன்படுத்துவது? செய்திகளை மட்டுமே ஒளிபரப்பும், இதழ்கள் வெளியிடும் ஊடக துறையை சேர்ந்தவர்கள் இப்படி செய்யலாமா? அப்படி என்ன செய்தார்கள் என்பதை விளக்கமாக பார்ப்போம்.. 

விளம்பரம் என்ற பெயரில் இன்றும் ஊடகத்தை பயன்படுத்தி, வேறுவழியில் கொள்ளை லாபம் சம்பாதித்து வரும் ஊடக முதலாளிகள் பெருகி வருகின்றனர். இவர்கள் பணம் சம்பாதிக்க, தேர்ந்தெடுக்கும் விளம்பரங்களை கவனமாக பார்க்க வேண்டும். போலி சாமியார் விளம்பரம், போலி மருத்துவர் விளம்பரம், போலி மருந்துகள் விளம்பரம், போலி வேலை வாய்ப்பு விளம்பரம், பெரிய நிறுவனங்களுக்கு ஜால்ரா விளம்பரம் என தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியாகின்றன. 

இதனால் தமிழ்நாட்டில் குற்றங்களும், சீர்கேடுகளும் அதிகம் நிகழ்கின்றன. பொதுமக்கள் பல இன்னல்களில் சிக்குகிறார்கள். செய்தி சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பார்க்கவும், படிக்கவும் செய்கின்றனர். அதில் வரும் செய்திகளையும், விளம்பரங்களையும் உண்மைத்தன்மை இருக்கும் என நம்புகின்றனர். 

வரும் விளம்பரங்களின் உண்மை தன்மைக்கு நாங்கள் பொருப்பு அல்ல என, பதிவும் செய்கிறார்கள். இதுதான் மிகப்பெரிய கொடுமை. 

ஒவ்வொன்றையும் ஆராய்ந்து, குற்றங்களை கண்டுபிடித்து, பொதுமக்களுக்கு உறுதுணையாக இருக்கும் செய்தி ஊடகங்கள், உண்மை நிலை தெரிந்தும் தெரியாதவர்கள் போல, போலிகளிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு, செய்தி என்ற பெயரில் போலிகளை ஊக்குவிக்கிறார்கள். பல முக்கிய செய்திகளை மறைக்கிறார்கள். 

அவர்கள் போலி என அறியாமல் பொதுமக்கள் ஏமாந்து, பல லட்சங்களை இழந்து, காவல்துறை உதவியை நாட வேண்டிய சூழ்நிலை வருகிறது. அதை செய்தியாக வெளியிடாமல் இருக்க பணம் பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை காப்பாறுகிறார்கள். 

இப்படிப்பட்ட கேவலமானவர்களால் தான் செய்திதுறை சீரழிந்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

குறிப்பாக கடந்த மாதம் வேலூரில் நடைபெற்ற போராட்டத்தை கூறலாம். அன்று மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் குறை கேட்கும் தினம். அனைத்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை செய்தியாளர்களும் கூடி இருந்தனர். 42 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், இதுவரை மௌனம் சாதிப்பது ஏன்? என்ற கோரிக்கையோடு, விளையாட்டு வீரர்களும், சில செய்தியாளர்களும் மற்றும் பொதுமக்களும் இணைந்து, ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். மேலும், விளையாட்டு பயிற்சியாளர்கள், சாதனை சிறுவர்கள், சிறுமிகள் ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். 

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை, பல பெரிய நிறுவன தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் செய்தி வெளியிடாமல் மறைத்து விட்டனர். இதனால் வேலூர் மாவட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் செயல்படுத்தாமல் முடங்கிப்போய் உள்ளது. ஆனாலும், தீர்வு ஏற்படாவிட்டால், மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என போராட குழு அறிவித்துள்ளது. 

ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரத்திற்காகவும், மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் வழங்கும் அரசு அடையாள அட்டைக்கும் ஆசைபட்டு, இப்படி ஒரு கேவலமான செயலை செய்துள்ளனர். இப்படிப்பட்ட அடிமை ஊடகங்களால் தான், தமிழ்நாடு சீரழிந்து வருகிறது. 

இதுபோன்ற பல ஆதார தகவல்களுடன் மீண்டும் விரைவில்… 

தமிழ்நாடு டுடே செய்தி குழுவினர்… 

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *