யாராவது சாகட்டும்.. காத்திருக்கும் குடிநீர் மற்றும் மின்சார வாரியம்.. 

உயிர் பலி ஏற்பட்டு, பெரும் ஆபத்து நிகழும் என்று தெரிந்தும் குழி தோண்டியுள்ளது குடிநீர் வாரியம். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துள்ளது மின்சார வாரியம். 

மதுரை பழங்காநத்தம் 76 ஆவது வார்டு அக்ரஹாரம் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது அதை சரி செய்வதற்காக மிகப்பெரிய பள்ளத்தை தோண்டியுள்ளனர். பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் மின்சார கம்பம் ஒன்று, உயிர் பலி வாங்க தயாராக, விழும் நிலையில் உள்ளது. 

குடிநீர் குழாய் சரி செய்வதற்கு முன் முறையாக மின்வாரியத்திற்கு தகவல் கொடுக்காமல் இவர்களே பள்ளம் தோண்டி உள்ளனர். அப்போது அருகில் உள்ள மின்கம்பம் கீழே விழுவது போல் உள்ளது. இதை பேரளவிற்கு கயிறை கட்டி அஜாக்கிரதாக இருந்துள்ளனர். 

இப்படி இருப்பது அறிந்தும், தனக்கு முறையாக தகவல் வரட்டும் என காத்திருக்கிறது, மின்சார வாரியம். இதனால் பொதுமக்களே, இதுகுறித்து மதுரை பழங்காநத்தம் மின்வாரிய அதிகாரி (AE) அவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். இதனடிப்படையில் உடனடியாக நாங்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளாராம். 

வேலை செய்வதற்கு முன், முறையாக மின்வாரியத்தில் தகவல் கொடுத்தால், உயிர் பலி விபத்துகளை தடுக்கலாமே என அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். 

செய்தியும், தகவலும் – வி.காளமேகம் மதுரை மாவட்டம்

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *