இந்த இருவரால், சீர்கெட்டு கிடக்கிறது ஊடகம்.. 

நமது ஊடக துறை சீர்கெட்டு போக இருவர் தான் காரணம்.. 

1.. ஊடக சங்க தலைவர்.. 

2.. பத்திரிகை வெளியீட்டார்… 

இவர்கள் இருவரும் ஊடக துறைக்கு ஏற்படுத்தியுள்ள சீர்கேடுகள் சில…. 

பல சங்க தலைவர்கள், தனது சங்கம் வலுப்பெற, ஊடகம் சாராத செல்வந்தர்களுக்கு, சங்கத்தில் பெரிய பதவிகளை வழங்குகிறார்கள். அதில் கொள்ளை பணம் ஈட்டுகிறார்கள். ஊடகத்தை சாராதவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி, வருடத்திற்கு ஒருமுறை கணிசமான தொகையை வசூல் செய்கிறார்கள். (முழு ஆதாரம் உள்ளது)… 

சில வெளியீட்டார்களோ, தனது பத்திரிகை எந்த வகையிலாவது வெளிவரவேண்டும் என்ற எண்ணத்தில் ஊடக துறை பற்றி அறியாத செல்வந்தர்களுக்கு, ஆசிரியர் மற்றும் செய்தி, இணை, துணை, பொருப்பு, கௌரவ ஆசிரியர் என பதவிகளை வழங்கியுள்ளார்கள். 

மேலும், சம்பளம் வாங்காமல் வேலை செய்யும் செய்தியாளர்களை சேர்க்கும் எண்ணத்தில், ஊடகம் பற்றி அறியாத, செய்தி சேகரிக்காத, பிழையில்லாமல் எழுத தெரியாத, புகைப்படங்களை எப்படி எடுக்க வேண்டும் என்ற ஊடக அறிவு இல்லாத பலரை பணத்தாசை காரணமாக இணைத்துள்ளார்கள். இதன் விளைவுகள் தான், இந்த சீர்கேடுகள். இதற்கு ஒருபடி மேலாக சிலர், பத்திரிகை வெளியிடாமலே, ஊடக அடையாள அட்டை விற்பனை செய்கிறார்கள். இதற்கு ஒருபடி மேலாக, கணிசமான பணம் பெற்றுக்கொண்டு, ஊடக துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்களுக்கு, அரசு அடையாள அட்டை பெற்று தருகிறார்கள்.

இதனால், செய்தி சேகரிக்கும் இடத்தில், செய்தியாளர்களுக்கான தகுதி இல்லாத பலர் கலந்து கொண்டு, ஊடக மரியாதையை சீர்குலைத்து வருகின்றனர். இதன் காரணமாக உண்மையான செய்தியாளர்கள், பெரும் கோபம் கொள்கின்றனர். இதனால், சில உண்மை செய்தியாளர்களையையும் சந்தேகிக்கும் சூழல் ஏற்படுகிறது. உண்மையான பத்திரிகையாளர்கள் மத்தியில் பிரிவினை ஏற்பட்டுள்ளதும் இதனால் தான். 

பெரிய நிறுவன செய்தியாளர்கள் ஒதுங்கி இருப்பது, முதலாளிகளுக்காகவா? பணத்திற்காகவா? முழுமையான செய்திகள் அடுத்த பதிவில்… 

News Reporter

2 thoughts on “இந்த இருவரால், சீர்கெட்டு கிடக்கிறது ஊடகம்.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *