முகமது சதக் கபீர் பப்ளிக் பள்ளியில் இரண்டாம் ஆண்டு மழலையர் பட்டமளிப்பு விழா…

ராமநாதபுரம் முகமது சதக் கபீர் பப்ளிக் பள்ளியில் இரண்டாம் ஆண்டு மழலையர் பட்டமளிப்பு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மருத்துவர் வித்யாபிரியதர்ஷினி கலந்து கொண்டு பேசுகையில் குழந்தைகள் அனைவரும் 90 சதவிகிதம் பெற்றோரின் அரவணைப்பில் உள்ளனர்.10% பள்ளி ஆசிரியர்களிடம் உள்ளனர்.எனவே அவர்களுக்கு பெற்றோர்கள் வெற்றி தோல்வியைப் பற்றி எடுத்துரைக்க வேண்டும்.தோல்வியை கண்டு பயப்பட கூடாது என விளக்கிஅதன் பயன்பாட்டை எடுத்துக் கூற வேண்டும். காலையில் பள்ளிக்குச் செல்லும்போது கால தாமதமாகி விட்டால் ஆசிரியர்களிடம் மாணவ மாணவிகள் பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லை இருசக்கர வாகனம் பழுதாகி விட்டது என பொய் சொல்ல சொல்லி தவறான பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுக்கக் கூடாது. ஆசிரியரிடம் உண்மைகளை தான் சொல்ல வேண்டும் அப்போதுதான் அவர்கள் தவறை திருத்திக் கொள்வார்கள். அது சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும் என்று உரையாற்றினார்.

பின்னர் ஓவியம் கலை நிகழ்ச்சி விளையாட்டு கல்வி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முகமது சதக் டிரஸ்ட் சேர்மன் முகமது யூசுப்,செயலாளர் சர்மிளா,எக்ஸிகியூடிவ் டைரக்டர் ஹமீது இபுராகிம்,சதக் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன்,முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சோமசுந்தரம் மற்றும் பள்ளி முதல்வர் ஆலியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ராமநாதபுரம் செய்தியாளர்: செ.முஹம்மது அனஸ்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *