நாளை நாங்க தான்.. IAS அதிகாரிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை..

தேர்தல் அதிகாரிகளிடம் திமுக ஆட்சிக்கு வந்தால் எங்கும் ஐஏஎஸ் அதிகாரிகளாகப் பணியாற்ற விருப்பம் இல்லையா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் பிரச்சாரங்களில் மூழ்கி உள்ளது. தமிழக மற்றும் தேசிய தலைவர்கள் தமிழகத்தை முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில் பிரச்சாரங்களின் போது மற்றவரை விமர்சிக்காமல் தனிநபர் தாக்குதல் நடத்துவதும் அதிகமாகி வருகிறது. அவ்வகையில் தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் இடையில் பிரச்சாரத்தின் போது வார்த்தைப் போர் முற்றியுள்ளது.

இதையடுத்து ஸ்டாலின் ’என்னைத் தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார். ஸ்டாலினின் காது ஜவ்வு கிழிந்துவிடும்’ எனப் பழனிச்சாமி பிரச்சாரத்தின் போது பேசினார். இதற்குப் பதிலளித்த ஸ்டாலின்’ ஸ்டாலினின் காது ஜவ்வு கிழிந்து விடும் என்று முதல்வர் சொல்கிறார். ஒரு முதல்வர் இப்படி பேசலாமா.. என் காது ஜவ்வு கிழிவது இருக்கட்டும்.. உங்கள் அரசியல் வாழ்வு ஜவ்வு கிழிந்துபோய்விடும் ஜாக்கிரதை.. தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகள் எல்லாம் வேலை செய்கிறார்களா இல்லையா எனத் தெரியவில்லை. அதிமுகவின் ஏஜென்டுகளாக செயல்பட துவங்கிவிட்டீர்களா? பொறுப்பை அவர்களிடம் கொடுத்துவிட்டு வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டுவிட்டீர்களா?.. நாளை திமுக ஆட்சிக்கு வந்ததும் எங்காவது ஐஏஎஸ் அதிகாரிகளாகப் பணியாற்றவேண்டும் என்ற நினைப்பு இல்லையா ? ‘ எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *