கிருஷ்ணா இன்டர் நேஷனல் பள்ளியின் ஆண்டு விழா….

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள கிருஷ்ணா இன்டர் நேஷனல் பள்ளியின் 5-வது ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருவனந்தபுரம் வருமான வரி உதவி ஆணையர் எம்.பூவலிங்கம் மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில் : இப்பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவது இப்பள்ளி மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக உள்ளதென நன்கு அறிந்து கொண்டேன். இதற்கு காரணம் பள்ளி ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் தாளாளர் பள்ளி முதல்வருக்கு பெருமை சேரும் என்றார்.மேலும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 வின்னர் ஆஜித் காலிஹ் பாடல்களை பாடி மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் பாராட்டைப்பெற்றார். சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளித் தாளாளர் கணேசகண்ணன் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் முத்துக்குமார் திரை இசையில் இளையராஜா பாடிய தென்றல் வந்து தீண்டும் போது என்னும் பாடலை பாடி மாணவ மாணவிகளிடம் இருந்து கைதட்டல் பெற்றார். பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.கல்வி மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் சிறந்த மாணவ மாணவியர்களுக்கு பள்ளியின் தலைவர் மாதவனூர் கிருஷ்ணன் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்உடன் பள்ளி செயலாளர் ஜீவலதா நன்றியுரையாற்றினார்.

எம்.ஜி பப்ளிக் பள்ளி தாளாளர் டாக்டர் சுப்பிரமணியன், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் செய்தியாளர் : செ.முஹம்மது அனஸ்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *