(16.04.2019) மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் தகவல்..

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் -தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொண்ட முன்னேற்பாடுகள் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் கூறியதாவது:

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 1,916 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் குடிநீர், கழிப்பறை,மின்சாரம்,அனைத்து அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகள்,மூத்த குடிமக்கள் சிரமமின்றி வாக்களிக்க சாய்வுதளம், சக்கர நாற்காலி உள்பட சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. 7,75,765 ஆண் வாக்காளர்கள்,7,82,063 பெண் வாக்காளர்கள்,மூன்றாம் பாலின வாக்காளர் 82 பேர் என 15,57,910 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு விநியோகிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராமநாதபுரம் நாடாளுமன்ற
தொகுதியில் ராணுவ வீரர்கள் 1,830 மின்னணு தபால் வாக்குச்சீட்டுகள், தேர்தல் பணி வாக்குச்சாவடி
அலுவலர்களுக்கு 5,310 தபால் வாக்கு சீட்டுகள், 3,253 பேருக்கு தேர்தல் பணி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தேர்தல் வாக்குப்பதிவிற்காக 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு 4,577 வாக்குச் செலுத்தும் கருவிகள்,2,299 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2,499 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்து அனைத்து மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரங்களிலும் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி முடிந்து சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாதுகாப்புஅறைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட தேர்தல் தொடர்பு
மையத்தில் 5,456 அழைப்புகள் வரப்பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்திய தேர்தல் ஆணையம் மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சி.விஜில் செயலி மூலம் 55 புகார்கள் வரப்பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்
நடத்தை விதி மீறல் தொடர்பாக 178 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ. 3.72 கோடி பறக்கும் படை, நிலைத்த கண்காணிப்புக்குழு அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததால் ரூ.3,03,36,000 திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
188 வாக்குச்சாவடி மையங்கள் வன்முறை நடைபெறலாம் எனவும்,135 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனவும்
கண்டறியப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மக்கள் எவ்வித அச்சமின்றி,சுதந்திரமாக வாக்களிக்க மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 792 வாக்குச்சாவடி மையங்கள் இணைய வழி வெப் கேமரா முறையில் கண்காணிக்கப்படவுள்ளது.தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 3 கம்பெனி துணை ராணுவத்தினர், 200-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள் வந்துள்ளனர்.இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் படி வாக்குப்பதிவு நிறைவிற்கு 48 மணி
நேரத்திற்கு முன் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்கள் தங்களது தேர்தல் பிரசாரம் முடிக்க வேண்டும்.(ஏப்.16) மாலை 6 மணிக்கு மேல்அரசியல் கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு அனுமதி இல்லை.இதனை மீறுவோர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, செய்தி மக்கள்
தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *