காங்., ஆட்சி அமையும் போது ஜிஎஸ்டி வரி விதிப்பில் திருத்தம் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முஹைதீன் உறுதி..

ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக., கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து பிரசார பொதுக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் முஹைதீன் பேசியதாவது:

தமிழகத்தில நாம் அனைவரும் ஜாதி,மத பேதமின்றி உறவு முறை வைத்து பழகி வருகின்றனர்.அரசியல்ஆதாயத்திற்காக மதத்தின் பெயரால் சூழ்ச்சி வேலை செய்வது மிகப்பெரிய குற்றமல்ல பாவமும் கூட.ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலை கட்டி முடித்தவர் சீதக்காதி என்பதை யாரும் மறுக்க முடியாத வரலாற்று உண்மை.இங்கு மத துவேசம் பேசுவது ஒவ்வாத விஷயம். ராமநாதபுரத்திற்கும் பா.ஜ.க.வுக்கும் என்ன சம்பந்தம். ஆட்சியில் அமர நாம் ஒற்றுமையை சிதைக்கும் சூழ்ச்சி வலையை பாஜக விரித்துள்ளது. குழப்பத்தை விளைவிக்கும் கொள்கையை தமிழகத்தில் விதைக்க பாஜக முயல்கிறது.இட ஒதுக்கீடு,மாநில சுயாட்சி,மத்தியில் கூட்டாட்சி,இந்தி திணிப்பு எதிர்ப்பு உள்ளிட்ட கொள்கைகள் பற்றி பாஜக., விற்கு என்ன தெரியும்.பயிர் கடன்,கல்விக்கடன் ரத்து,பெண்களுக்கு வட்டியில்லா கடன், நீட் தேர்வு ரத்து,கல்வியை மாநில பட்டியலில் இணைப்பு உள்ளிட்ட திமுக தேர்தல் அறிக்கைகளை செயல்படுத்தும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் பிரதிபலித்துள்ளார். 52 எம்பிகள் வைத்து கொண்டு கடந்த 5 ஆண்டு காலத்தில் அதிமுக ஒன்றும் செய்ய வில்லை.பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கையால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்., தலைமையில் மத்திய அரசு அமையும் போது ஜிஎஸ்டி வரி விதிப்பில் திருத்தம் கொண்டுவரப்படும்.மேலும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் இவ்வாறு அவர் பேசினார்.முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம்,திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம்,தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, இந்தியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக் செயலர் கடையநல்லூர் எம்.எல்.ஏ.முகமது, அபு பக்கர்,மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான்,மார்க்ஸிஸ்ட் மாவட்ட செயலர் காசிநாத துரை,இந்திய கம்யூ மாவட்ட செயலர் முருகபூபதி, காங்.,மாவட்ட தலைவர் தெய்வேந்திரன்,மதிமுக மாவட்ட செயலர் குணா, கொள்கை பரப்பு செயலாளர் அழகு சுந்தரம்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முகமது, முன்னாள் எம்.பி.பவானி,முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன், வர்த்தக அணி மாநில துணை செயலாளர் கிருபானந்தம்,வேட்பாளர் நவாஸ் கனி,நகர் செயலாளர் கார்மேகம், முகமது பைசல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம்செய்தியாளர் : செ.முஹம்மது அனஸ்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *