வேலுமாணிக்கம் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா..

ராமநாதபுரம் அருகே உள்ள வேலுமாணிக்கம் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் கலந்து கொண்டார்.மேலும் அவர் பேசுகையில் இப்பகுதி மாணவ, மாணவிகளுக்கு கல்வியை சேவையாக வேலுமாணிக்கம் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளி வழங்கிவருகிறது. இப்பள்ளியில் பயின்று மாணவ மாணவிகள் பல உயரிய பதவிகளுக்கு வர வேண்டும். மக்கள் பணி செய்ய வேண்டும் குழந்தைப்பருவத்தில் பெற்றோர்கள் நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.அப்போது தான் அவர்களின் மனதில் அந்தப்பழக்க வழக்கம் பதிந்து பெரிய உயரிய பதவிக்கு வரும் பொழுது மற்றவர்களை மதிக்கும் பழக்கம் உருவாகும்.ஆசிரியர்கள் அதேபோல் அவர்களுக்கு நல்ல விஷயங்களை கல்வி வாயிலாக சொல்லிக் கொடுத்து அவர்களை பல உயரிய பதவிகளுக்கு செல்வதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றார். பின்னர் மழலையர்களுக்கு பரிசுகளும் பட்டங்களையும் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர்கள் ஜெகநாதன் மனோகரன் கதிரேசன் மற்றும் பள்ளி முதல்வர் பரிமளா ஆண்டனி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள்,பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *